பாடசாலைக்கீதம்
அருள் தரும் இறைவனைப் போற்றிடுவோமே
அனுதினம் மாணவர் நாமே
இருளினை நீக்கி ஒளியினைப் பெறவே
இகபரம் இரண்டிலும் நாமே
ஜெயமே... ஜெயமே... ஜெயமே...
ஜெய.. ஜெய.. ஜெய.. ஜெயமே..
இகபரம் இரண்டிலும் நாமே.
பல பல கலைகளைப் பயின்றிடுவோமே
பண்புடன் பாலர்கள் நாமே
சீலமுடன் சிறந்தோராய் விளங்க
சிறப்புறு கல்வியைப் பெறவே ...
நல்லவை செய்திட நாடிடுவோமே
நாவினில் உண்மை நவின்றிடுவோமே
அல் - மிஸ்பாஹ் மாணவர் அறிவைப் பெறவே
அல்லாஹ் அருள் புரிவாயே - ஜெயமே..
கல்வி கழகாம் கசடற மொழியே
கருணை செய்வாய் இறையோனே
ஞானமும் கல்வியும் நயம்பட உரைக்க
நாயனே எமக்கருள் வாயே... ஜெயமே...












