அல் மிஸ்பாஹ் மாணவன் மாகாணத்தில் தங்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவு
இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் Ritzbury நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53th Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (03.08.2024) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் எமது பாடசாலையை சேர்ந்த MMM. Aaqil Mika எனும் மாணவன் 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான 80m தடைதாண்டல் ஓட்டத்தில் முதலாம் இடத்தையும் 100m ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் 12 வயது ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் AM. Layis எனும் மாணவன் 3.92m தூரம் பாய்ந்து அதி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இம்மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களையும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.












